மழை நீரை நம்பி விவசாயம் செய்யும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன்
என்பதால் மழை நீரின் அருமை பெருமை நன்றாகவே உணர்ந்தவன் நான். வானத்து மழையை நம்பி பயிர் நட்டுவிட்டு இன்றைக்காவது மழை வராதா என்று தினம்தோறும் வானத்தை எட்டிப்பார்த்து எதிர்பார்த்து காத்திருக்கும் மழை தேடும் சமூகம் அது… “அறுவடை காலங்களில் மழை அதிகமாகி விளைச்சல் பாதிக்கப்படுவது வேறு கதை” ஆனாலும் மழை வேண்டிய காலத்தில் மழையில்லாமல் பயிரோடு சேர்த்து அவர்களின் வாழ்கையும் வறண்டு போவதே இன்றைய கால நிலை..
காலநிலை மாற்றம் வெப்பம் அதிகரிப்பு மழையின்மை இதற்கெல்லாம் காரணம் என்ன… இயற்கையை அழிக்கிறோம் மரங்களை வெட்டுகிறோம் காலனிலையை குழப்புகிறோம் மழையை தடுக்கிறோம் இறுதியில் ஏசி அறையிலே தஞ்சமடைகிறோம் வசதியுள்ளவர்கள… மழையை நம்பிய ஏழை விவசாயிகள் என்ன செய்வார்கள் ஒட்டிய வயிரோடும் வற்றாத நம்பிக்கையோடும் தொடர்கிறது அவர்களின் காத்திருபபு காலம் உள்ளவரை…
ஆதி மனிதன் கண்டுபிடித்த ஆதி தொழில் விவசாயம் அல்லவா….. இன்றைய கால கட்டத்தில் அதிகம் வறுமையினால் வாடுபவர்களும் அந்த விவசாயிகள்தானே, ஒரு மருத்துவன் உயிரை காப்பாற்றுகிறான் ஒரு ஆசான் அறிவை வளர்க்கிறான் ஒரு பொறியியலாளன் நாம் வசிக்க கட்டுமானங்களை கட்டுகிறான் ஒரு நிர்வாகி சமூகத்தை நிர்வகிக்கிறான் இவை எல்லாவற்றையும் தொடர உயிர் வாழ வேண்டுமல்லவா உயிர் வாழ உணவு தேவை உணவை உற்பத்தி செய்து தருபவன் யார் விவசாயி அல்லவா அவன் போற்றப்படவேண்டியவந்தானே…. சமூகத்தில் மதிக்கப்படவேண்டியவந்தானே….. அவன் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படவேண்டும்தானே…..
எவவளவுதான் வெயில் மழை பாராமல் உழைத்தாலும் கிடைப்பதென்னவோ அன்றைய தேவையை மட்டும் நிறைவேற்ற போதுமான பெறுமதியே…இதில் பலருக்கு மூன்று வேளை உணவுக்கும் கஸ்டமே.. அவர்களின் வலியும் வேதனைகளுமே மிஞ்சும் சேமிப்பு
போஷாக்கின்மை, கல்வி கற்க வசதியின்மை போன்றவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகள் எத்தனை…. புத்தகம் தூக்க வேண்டியவர்கள் கூலித்தொழிலாளர்களாய், தாயிப்பாலைத்தவிர வேறு எந்த பாலையும் கானாத குழ்ந்தைகள் எத்தனை எத்தனை….
இவவாறிருக்கையில் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்காவது நியாயமான விலை கிடைக்கிறதா? இல்லை. மூண்று மாதம் ஆறு மாதம் வெயில் மழை பாராது அயராது உழைத்து களைத்தவர்களை விட பத்து பதினைந்து நிமிடங்கள் வியாபாரம் பேசும் இடைத்தரகள்,வியாபாரிகள் அல்லவா அதிக லாபம் ஈட்டுகின்றனர், ஏதாவது பேசப்போனால் உங்கள் பொருள் இல்லாவிட்டால் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து கொள்வோம் என்ற பயமுறுத்தல் வேறு…. பணக்காரர்கள் தொடர்ந்து பணக்காரர்களாகவும், ஏழை தொடர்ந்து ஏழையாகவும் மாறுவதே மிக கவலைக்கிடமான நிலை.
தொடரும் வறட்சியினால் விளைனிலங்கள் பாலைவ்னமானால் உணவுத்தேவைக்கு எங்கே போவது. இன்னும் 40 , 50 வருடங்களில் கைனிறைய காசிருக்கலாம் கணனியிருக்கலாம் மென்பொருள் இருக்கலாம் உணவில்லையென்றால் காசும் கணனியும் மென்பொருள்களும் உணவைத்தேடித்தருமா….? இல்லை மழையைத்தான் பொழிவிக்குமா….? முன்னொரு காலத்தில் இலங்கையை ஆண்ட மனனனான பராக்கிரமபாகு “வானிலிருந்து விழும் ஒரு துளி நீரையேனும் கடலை சென்றடைய விடமாற்றேன்” என்றான் சொன்னது மட்டுமல்லாம்ல் பல நீர்ப்பாசனத்திட்டங்களை செயற்படுத்தினான் அதன் மூலம் மக்கள் இன்னும் பயன் பெறுகின்றனர்… இப்போதுள்ள ஆட்சியாளர்க்ளோ மழை பெய்தால் அவசரமாக கடலை சென்றடையும் திட்டம் அல்லவா போடுகின்றனர்..
நமக்கெல்லாம் என்னவோ மழை என்பது வெறும் நீர்த்துளிகள்தான் ஆனால் ஏழை விவசாயிகளுக்கு அது வாழ்வின் ஆதாரம் அல்லவா… ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு உணவுப்பருக்கை அல்லவா…….
இயற்கையை காப்போம்
மழையை வரவேற்போம்
ஏழைகள் வாழ்வு வளம் பெற
வழி செய்வோம்……
நாடு செழிக்கட்டும்
நம்மக்கள் வாழட்டும்
வளமுடன்…………………!