Mazhalaiyin Mozhiyinil Song Lyrics in Pillaikkaga

 Mazhalaiyin Mozhiyinil – Tamil Song Lyrics 
Film : Pillaikkaga 
Singers : S P Balasubrahmanyam, K S Chitra 
Lyrics & Music : Gangai Amaran ..

Mazhalaiyin Mozhiyinil lyrics in Tamil

 

ஆ : மழலையின் மொழியினில் அழகிய
தமிழ் படித்தேன்.. நான்..
குழலிசை யாழிசை இணைந்தொரு
இசை படித்தேன்…
விழி பார்வை முழுதும்…
ஒளி வீசும் எழிலே
உனை பாடும் வரமே
அது போதும் தினமே …
பெ: மழலையின் மொழியினில்
அழகிய தமிழ் படித்தேன..நான்..
குழலிசை யாழிசை இணைந்தொரு
இசை படித்தே….ன்

ஆ : தோளில் ஆடும் பிள்ளை

பெ:இனி இதைவிட சுகம் எதுமில்லை..

ஆ: உள்ளம் பூத்த முல்லை

பெ: இந்த உறவுக்கு தடைகளும் இல்லை..


ஆ: காணாத பாசம் ..
நீ தந்த நேசம்
கலையா…தது என்றும் பிரியாதது…

பெ: அன்பில் வாழும் பூஞ்சிட்டு
அன்னை பாடும் தாலாட்டு

ஆ: இன்றும் என்றும் கேட்காதோ
இன்பம் தன்னை
சேர்க்காதோ

பெ: இணைந்தொரு பாலம்
உறவுக்கு போட்டது..நீ..தான்

ஆ : மழலையின் மொழியினில் அழகிய
தமிழ் படித்தேன் நான்…

பெ: குழலிசை யாழிசை
இணைந்தொரு இசை படித்தே….ன்

பெ: பட்டம் வாங்க வேண்டும்

ஆ: பல பதவிகள் நீ பெற வேண்டும் …

பெ : பாரில் உன்னை பார்த்து

ஆ:தினம் பலர் உந்தன்
வழி வரவேண்டும்…

பெ: துணிவோடு உள்ளம்
கனிவோடு என்றும்
நீ வாழ்கவே… இன்பம் உனக்காகவே …

ஆ: சட்டம் தன்னை காப்பாற்றும்
ஊரும் உன்னை பாராட்டும்..

பெ : பாரதி கண்ட புதுமை பெண்

நீயென என்றும் ஊர் போற்றும்

ஆ: அதை தினம் பார்த்து
மனமது ஆறிடும்… கண்ணே …
பெ : மழலையின் மொழியினில்
அழகிய தமிழ் படித்தேன் நான்…
குழலிசை யாழிசை இணைந்தொரு
இசை படித்தேன் …

விழி பார்வை முழுதும்
ஒளி வீசும் எழிலே
உனை பாடும் வரமே
அது போதும் தினமே …
ஆ: மழலையின் மொழியினில் அழகிய
தமிழ் படித்தேன்..நான்..

குழலிசை யாழிசை இணைந்தொரு
இசை படித்தே….ன்

 
Watch  Mazhalaiyin Mozhiyinil video song
Scroll to Top