தூக்கத்தில் உன் குரல் கேட்டு எழுந்து பார்த்தேன்
ஆனால் நீ இல்லை…
பின்பு தான் தெரிந்தது அது பக்கத்து வீட்டு “எருமை மாடு” என்று!
சில உண்மைகள் கசகத்தான் செயும் ….
***********************
அமலா: சச்சின் க்கும் என் கனவருக்கும் ஒரே ஒரு வித்தியாசம்!
கமலா: என்ன அது?
அமலா: சச்சின் “சதம் அடிப்பார்” என் கனவர் “சாதம் வடிப்பார்”!
கமலா: !!!???
***********************
சாமி… நீங்க சொன்னபடி என் மனைவியைத் தூக்கியெறிந்துட்டேன்…?”
அடப்பாவி… நான் எப்ப உன் மனைவியைத் தூக்கியெறியச் சொன்னேன்?”
நீங்கதானே சாமி கவலைகளைத் தூக்கியெறியணும்னு சொன்னீங்க
**********************
சாப்பிடும்போது கூட உன் கனவருக்கு ஆபிஸ் ஞாபகமா?
எப்படிச் சொல்றே?
உப்பு வேணும்னு கேட்டுட்டு டைனிங் டேபிளுக்குக் கீழே கையை நீட்டுறார்
***********************
இராமசாமி : நான் எப்போதும் கீதா உபதேசம் கேட்கிறேன், அதன் படியே நடந்து கொள்கிறேன்
சுந்தரேசன் : அவ்வளோ நல்லவரா நீங்க
இராமசாமி : அப்படியெல்லாம் இல்லை எங்க வீட்டுக்காரம்மா பேரு கீதா
********************
இரவு மூணு மணிக்கு நல்லா தூங்கிட்டு இருந்த பொண்டாட்டிய புருஷன் தட்டி எழுப்பினான்.
பொண்டாட்டி: என்னங்க, இந்த நேரத்துல…
புருஷன் : ஒரு அதிசயம் நடந்துருச்சி..
பொண்டாட்டி: என்ன அதிசயம்?
புருஷன் : ஒண்ணுக்கு இருக்கலாம்னு பாத்ரூம் கதவ திறந்தேனா, தானாவே லைட் எரிஞ்சுது. அப்புறம் ஒண்ணுக்கு இருந்துட்டு கதவை மூடினா தானா லைட் நின்னுடுச்சி. என்னா அதிசயம் பார்த்தியா?
பொண்டாட்டி : தூக்க கலக்கத்துல பாத்ரூம்ன்னு நினைச்சி பிரிட்ஜ திறந்து ஒண்ணுக்கு இருந்துட்டு கதை சொல்றிங்களா, மூடிகிட்டு படுங்க..
**************
புருஷன் : !!!!!!!????
ஊருக்கு போய் சேர்ந்ததும் லெட்டர் போடு கமலா?
ஏங்க?
அப்பதான் எனக்கு முழு சுதந்திரமே கிடைச்சமாதிரி
**************
கனவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு!
குடிக்க வெந்நீர் கொடு!
மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க?
மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி உங்களுக்கு வரும்
**************
வேலைக்காரியை பிடிச்சுக்கிட்டு அழுவுறாரே உன்
புருஷன், ஏன்?
வேலைக்காரிகிட்டே சிரிச்சுப் பேசாதீங்கன்னு சொன்னேன்,
அதான்!
*************
ஏண்டி பாத்ரூமை திறந்து வெச்சிட்டே குள்க்கிறே?
யாராவது நான் குளிக்கிறதை எட்டிப் பார்த்தா, யார்னு உடனே கண்டுபிடிச்சிடலாமே…!
*************
என் மனைவி நான் சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா.
ரொம்ப கொடுத்து வைச்சவர் நீங்க, விவரமா சொல்லுங்க.
உதாரணமா நான்தான் சமைப்பேனு சொல்லுவேன். சரின்னுடுவா. நான் தான் துவைப்பேன்னு சொல்லுவேன் சரின்னுடுவா.
*************
மனைவி: ராத்திரி தூக்கத்தில ஏன் சிரிச்சிங்க.?
கனவன்: கனவுல அனுஷ்கா வந்தா..!
மனைவி: அப்பறம் ஏன் கத்துனீங்க.?
கனவன்: நடுவுல நீ வந்துட்ட..
யாவும் ஆங்காங்கே படித்ததில் பிடித்தது..