Dandiya Aattamum Aada lyrics in Tamil

AR Rahman Great Musica Kadhalar Thinam Dandiya Aattamum Aada lyrics

 காதலர் தினம் திரைப்படத்தில் இடம்பெற்ற தாண்டியா

ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட பாடல் காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பாடலாகும். காதலர் தினம் திரைப்படத்திற்கு இசை அமைத்தவர் எ.ஆர். ரஹ்மான். பாடலை பாடியவர்கள் கவிதா கிருஷ்ணமூர்த்தி,உன்னி மேனன், எம்.ஜி. ஸ்ரீ குமார்.பாடலுக்கான வரிகளை எழுதியவர் வாலி. படத்தை இயக்கியவர் இயக்குனர் கதிர்.

Dandiya Aattamum Aada
image source youtube.com
 

 

உன்னி  : தாண்டியா
ஆட்டமுமாட தசராக்
கூட்டமும் கூட குஜராத்
குமரிகளாட காதலன்
காதலிய தேட அவள்
தென்படுவாளோ எந்தன்
கண் மறைவாக இன்று
காதல் சொல்வாளோ நெஞ்சோடு
அவள் எங்கே என காணாமல் வாட
என்னைத்தான் ஏங்க வைப்பாளோ

 

உன்னி  : தாண்டியா
ஆட்டமுமாட தசராக்
கூட்டமும் கூட குஜராத்
குமரிகளாட காதலன்
காதலிய தேட

 

ஸ்ரீ குமார் : உன்னைக்கண்டு
எண்ணம் யாவும் மெல்ல
ஊமையாகி நின்றதென்ன
சொல்ல நூறு வார்த்தை
அல்ல அல்ல ஒரு வார்த்தை
புரியாதா

 

கவிதா : எந்த வார்த்தை
சொல்லவில்லையோ நீ
அந்த வார்த்தை எந்தன்
கண்களால் நான் நூறு
ஜாடையில் சொன்னேனே
தெரியாதா புரியாதா

 

ஸ்ரீ குமார் : ஓஓ… { மையைப்போல
நானும் கண்ணில் சேர வேண்டும் } (2)
பூவைப்போல நானும் உந்தன்
கூந்தல் சேர வேண்டும்

 

கவிதா : ஓ… கண்ணில்
வைத்த மையும் கரைந்து
போகக்கூடும் கூந்தல் வைத்த
வண்ணப் பூவும் வாடிப் போகக்கூடும்

 

ஸ்ரீ குமார் : சிறு காதல் நெஞ்சை
நான் தரலாமா உன் கணவனாக
நான் வரலாமா

 

கவிதா : இந்த வார்த்தை
மட்டுமே நிஜமானால்
ஒரு ஜென்மம் போதும்

 

ஸ்ரீ குமார் : உயிரே வா…
பெண் : அன்பே வா…

 

ஸ்ரீ குமார் : உயிரே வா…
பெண் : அன்பே வா…

 

உன்னி  : தாண்டியா
ஆட்டமுமாட தசராக்
கூட்டமும் கூட குஜராத்
குமரிகளாட காதலன்
காதலிய தேட அவள்
தென்படுவாளோ எந்தன்
கண் மறைவாக இன்று
காதல் சொல்வாளோ நெஞ்சோடு
அவள் எங்கே என காணாமல் வாட
என்னைத்தான் ஏங்க வைப்பாளோ

 

கவிதா : காதல் பார்வைகள்
எல்லாமே அழகு காதல்
வார்த்தைகள் எல்லாமே
கவிதை காதல் செய்வதே
எந்நாளும் தெய்வீகம் தெய்வீகம்

 

ஸ்ரீ குமார் : காதல் என்பதைக்
கண்டு பிடித்தவன் காலம்
முழுவதும் நன்றிக்குரியவன்
காதல் இல்லையேல் என்னாகும்
பூலோகம் பூலோகம்

 

கவிதா : ஓஹோ… உள்ளம்
என்ற ஒன்றை உன்னிடத்தில்
தந்தேன் தந்த உள்ளம் பத்திரமா
தெரிந்துகொள்ள வந்தேன்

 

ஸ்ரீ குமார் : ஓஹோ… என்னைப்
பற்றி நீதான் எண்ணியது தவறு
என்னைவிட உந்தன் உள்ளம்
என்னுடைய உயிரு

 

கவிதா : இரு உயிர்கள்
என்பதே கிடையாது
இதில் உனது எனது
எனப் பிரிவேது

 

ஸ்ரீ குமார் : இந்த வார்த்தை
மட்டுமே நிஜமானால்
ஒரு ஜென்மம் போதும்

 

கவிதா : உயிரே வா…
ஸ்ரீ குமார் : அன்பே வா…

 

பெண் : உயிரே வா…
ஸ்ரீ குமார் : அன்பே வா…

 

உன்னி  : { வாலிப நெஞ்சங்கள்
உறவு கொண்டாட வந்தது
இங்கொரு ராத்திரி
தாண்டியா என்றொரு ராத்திரி } (2)

 

ஆண் & கவிதா : துணை செய்ய
நாங்கள் உண்டு தோழரே துணிந்து
நீ காதல் செய்வாய் தோழியே
{ உங்களாலே என்றும் மண்ணில்
காதல் வாழுமே } (2)

 

கவிதா : ஓஓஓஓஓஓ…..…
ஆண் & பெண் : { உங்களாலே
என்றும் மண்ணில் காதல் வாழுமே } (2)

 

கவிதா : ஓஹோ ஹோ ஹோ ……
ஓஹோ ஹோ ஹோ ……
ஆண் & பெண் : { உங்களாலே
என்றும் மண்ணில் காதல் வாழுமே } (2)

 

கவிதா : ஓஹோ ஹோ ஹோ ……
ஓஹோ ஹோ ஹோ ……
 
 
 

Song credits:

Song title -Dandiya Aattamum Aada
Movie –  Kadhalar Dhinam
Music –  A.R. Rahman
Singers: Unni Menon, M.G. Sree Kumar and Kavitha Krishnamurthy
Lyrics:  Vaali
Starring :Kunal,sonali
Director :Kathir

, ,
Scroll to Top