Responsive Menu
Add more content here...
Responsive Menu
Add more content here...
Responsive Menu
Add more content here...
Responsive Menu
Add more content here...

கதைகள் பேசும் விழிகள்…!

அங்காடித்தெரு என்ற திரைப்படம் நம் மனங்களை விட்டு எப்படி அகலாமல் இருக்கிறதோ அதேபோல அப்படத்தின் பாடலான “கதைகளை பேசும் விழி அருகே” என்ற பாடல் என் மனதைவிட்டு அகலவேயில்லை. பாடல் வெளிவந்ததுமுதல் இன்றுவரை இந்தப்பாடலை கேட்கும் போதெல்லாம் மனதோடு ஓர் மயக்கம் என்னுள்ளே. சில சோர்வான நேரங்களில் கூட இந்தப்பாடலை கேட்கும் போதும் ஓர் உற்சாகம்.

கதைகள் பேசும் விழிகள்

வாழ்க்கையின் துன்பியலைச்சொல்லப்போகும் படத்தின் ஆரம்பமே கொஞ்சம் வித்தியாசமாக ஓர் ஆழகான காதல் பாடலில் ஆரம்பிக்க நினைத்த இயக்குனர் வசந்தபாலனுக்கு ஒரு சபாஷ் போடலாம். படத்தின் கதை எதுவும் தெரியாமல் முதன்முதலில் படம்பார்க்க செல்வோருக்கு இந்தப்பாடல் மனதை குளிரவைக்கும். பாடல் முடிந்ததுமே அடுத்ததாக நடக்கும் காட்சிகள் மனதை நெகிழவைக்கும்.

பாடலின் ஆரம்ப வரிகளே ஓர் அழகான கவிதை.. அதற்குச்சொந்தக்காரர் நா.முத்துக்குமார். கண்ணதாசன்,வாலி,வைரமுத்து வரிசையில் பாடல் வரிகளை ரசிக்க வைக்கும் ஓர் சிறந்த பாடலாசிரியர் இவர்.

கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே
காய்ச்சல் வருதே….


கதைகளை பேசும் விழி அருகே என பாடல் தொடங்கும்போதே அதற்கேத்தாற்போல் அஞ்சலியின் கண்களை குளொசப்பில் கான்பிப்பது செம அழகு. காதல் பாடல்கள் என்றாலே வெளிநாட்டு ஐஸ் மலைகளிலும் தெருக்களிலும் நடனமாட வேண்டும் என்பதை உடைத்தெரிந்து பாடல் முழுக்க நாயகன் நாயகியின் குறும்புத்தனங்களை கோர்வையாக கோர்த்து பாடல் காட்சி உருவாக்கப்பட்டிருப்பது நல்ல ரசனை.

(ஓ.. கதைகளை பேசும்…)


ஒ.. என்னைக்கேளாமல் எதுவும் சொல்லாமல்
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே..
ஒ.. இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே..


இசை ஜீ.வி.பிரகாஷ் இதமான இசை அன்மையகாலங்களில் இவரின் படப்பாடல்களை ரசிக்க முடிகிறது நிச்சயம் நல்லதொரு எதிர்காலம் இருக்கு இந்த இசை வாலிபனுக்கு. இசைப்புயலின் குடும்பத்திலிருந்து வந்தவராச்சே..

(ஓ.. கதைகளை பேசும்…)

கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது
வருகிற வாசனை நீயல்லவா..
உன்னுடன் நாளும் ஒவ்வொரு நொடியும்
சர்க்கரை தடவிய நொடியல்லவா..
கல்லும் மன்னும் ஓ.. வீடுகளில்லை
ஓ.. அன்பின் வீடே அழிவதுமில்லை
வெறும் தரையில் படுத்துக்கொண்டு
வின்மீன் பார்ப்பது யோகமடா..
உன் மடியும் இருந்தால்
வாழ்க்கையில் எதுவும் தேவையில்லையடி..

பாடல் என்றாலே நாயகனும் நாயகியும் நடனம் ஆடியேதான் தீர வேண்டும் என்ற திரைப்படங்களோடு ஒட்டியிருந்த கூத்தாடி கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி இப்பொழுதெல்லாம் பாடலை காட்சிகளின் பின்னனியிலேயே ஒலிக்கவிடுவது நல்ல மாற்றமாகவே தெரிகிறது. இந்தப்பாடலிலும் அதுபோலவே நாயகனும் நாயகியும் ஓர் இரவில் பயனிக்கும் காட்சியினூடே பாடல் நகர்ந்து செல்கிறது.. அந்தப்பாடல் காட்சி முழுவதிலும் மகேஷ்,அஞ்சலி ஆகியோரின் நடிப்பு குழந்தைத்தனமாகவும் கொஞ்சும் காதல் குறும்புமாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பது மிக அழகு

(ஓ.. கதைகளை பேசும்..)


உனக்குள் தொடங்கி உனக்குள்தானே
எந்தன் உலகம் முடிகிறதே..
உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே
எந்தன் நாட்கள் விடிகிறதே..
ஓ.. இரவின் மடியில் குழந்தைகளாவோம்
ஒ.. இருட்டின் நதியில் இறங்கிப்போவோம்
நேற்றென்னும் சோகம் நெருப்பாய்
வந்து தீ மூட்டும்..
இன்றென்னும் மழையில் அத்தனை நெருப்பும்
பூக்கள் நீட்டும்..


(ஓ.. கதைகளை பேசும்..).


பாடலை இங்கே பார்க்கலாம்..

Scroll to Top