Theekkoluthi Lyrics in Tamil – Bison Kaalamaadan-Mari Selvaraj

Read தீக்கொளுத்தி பாடல் வரிகள் Theekkoluthi lyrics in Tamil from Bison Kaalamaadan. Sung and composed by Nivas K Prasanna with lyrics by Mari Selvaraj, starring Dhruv Vikram & Anupama Parameshwaran.

Theekkoluthi lyrics in Tamil from the movie Bison Kaalamaadan showcase a deeply emotional song that blends pain, longing, and love with poetic beauty. Composed and sung by Nivas K Prasanna, the melody carries a soulful intensity that resonates with the listener. The lyrics, written by Mari Selvaraj, are powerful and raw, reflecting human emotions through metaphors of fire, fragrance, and passion. Featuring Dhruv Vikram and Anupama Parameshwaran, the visuals are expected to enhance the emotional essence of this track. Directed by Mari Selvaraj, Theekkoluthi is not just a song but an expression of burning love and sorrow, making it a memorable highlight of the film’s soundtrack.

theekkoluthi lyrics in tamil

தீக்கொளுத்தி பாடல் வரிகள்

தீ மூட்டி தீ மூட்டி
நெஞ்சாங்கூட்ட பத்த வெச்ச
காட்டுப்பேச்சி நீ காட்டுப்பேச்சி நீ

தாலாட்டி தாலாட்டி
பச்சப்புள்ள ஏங்க வெச்ச
பாட்டுப்பேச்சி நீ பாட்டுப்பேச்சி நீ

ராசாத்தி உன் நினைப்பு
கருவக்காட்டு முல்லாச்சுடி

அடி ஆத்தி உன் சிரிப்பு
புலியங்காட்டு பூவாச்சுடி

போற நீ வாக்கப்பாட்டு
உடஞ்சேன் நான் ஏக்கப்பட்டு
மருதாணி நீ தாண்டி
மனசெல்லாம் உன் நிறம்தாண்டி

அடியே போடி…
நீ போடி
உன்னை தேடி என்ன தேடி
என் உயிரும் ஓடுது
உடம்போ வேகுது
மஞ்சநதி அடியே மஞ்சநதி
நீ தீக்கொளுத்தி தீக்கொளுத்தி
தீக்கொளுத்தி தீக்கொளுத்தி

அடியே மச்சி வீட்டுமயிலே
என் மனசு போடும் மாராப்பு மேல
உன் பாசம் எரியுதடி
அதுல என் ஆச துடிக்குதடி

அடியே மச்சி வீட்டுமயிலே
உன் தவிப்பு போடும் தண்டார ஓச
என் கூட்ட உடைக்குதடி
அதுல உன் வாசம் நுழைக்குதடி

உன் வாசம் நுழைக்குதடி
என் கூட்ட உடைக்குதடி
என் ஆச வெடிக்குதடி
உன் பாசம் எரியுதடி

உன் வாசம் நுழைகுதடி
என் கூட்ட உடைக்குதடி
என் ஆச வெடிக்குதடி
உன் பாசம் எரியுதடி

போட்டுவச்ச என் ரத்தினமே
வரஞ்சு வச்ச என் சித்திரமே
பூ முடிச்சு நீ போகையில
தீ பிடிச்சு நான் சாவுறேனே
தீ பிடிச்சு நான் சாவுறேனே
தீ பிடிச்சு நான் சாவுறேனே

நீ மலையேரி போற
நான் மண்ணோடு போறேன்
நீ கரையேரி போற
நான் கடலோடு போறேன்

நீ காத்தோடு காத்தாக
கனவோடு கனவாக
ஒடியோடு ஒலியாக
வலியோடு வலியாக
எங்கேயோ போற
எங்கேயோ போற
எங்கேயோ போற

ராசாத்தி உன் நினைப்பு
கருவக்காட்டு முல்லாச்சுடி
அடி ஆத்தி உன் சிரிப்பு
புலியாங்காட்டு பூவாச்சுடி

போர நீ வாக்கப்பாட்டு
உடஞ்சேன் நான் எக்காப்பட்டு
மருதாணி நீ தாண்டி
மனசெல்லாம் உன் நிறம்தாண்டி

அடியே போடி…
நீ போடி
உன்னை தேடி என்ன தேடி
என் உயிரும் ஓடுது
உடம்போ வேகுது
மஞ்சநதி அடியே மஞ்சநதி
நீ தீக்கொளுத்தி தீக்கொளுத்தி
தீக்கொளுத்தி தீ தீ தீக்கொளுத்தி
தீ தீ தீக்கொளுத்தி

அடியே ஒத்த சொல் ஓயிலே
என் மனசு போடும் மாராப்பு மேல
உன் பாசம் எரியுதடி
அதுல என் ஆச துடிக்குதடி

அடியே ஒத்த சொல் ஓயிலே
உன் தவிப்பு போடும் தண்டார ஓச
என் கூட்ட உடைக்குதடி
அதுல உன் வாசம் நுழைக்குதடி

உன் வாசம் நுழைக்குதடி
என் கூட்ட உடைக்குதடி
என் ஆச துடிக்குதடி
உன் பாசம் எரியுதடி

உன் வாசம் நுழைக்குதடி
என் கூட்ட உடைக்குதடி
உன் பாசம் எரியுதடி
என் ஆச துடிக்குதடி… ஏ ஏ ஏ

Theekkoluthi Lyrics in English

Theekkoluthi Lyrics in Tamil Details

Song Credits

Song Name : Theekkoluthi
Movie : Bison Kaalamaadan
Song Composed, Arranged and Programmed by Nivas K Prasanna
Singer : Nivas K Prasanna
Lyrics : Mari Selvaraj
Starring:Dhruv Vikram, Anupama Parameshwaran
Director : Mari Selvaraj
Music Label – Think Music India

தீக்கொளுத்தி பாடல் வரிகள் (Theekkoluthi Song Lyrics) பைசன் காலமாடன் (Bison Kaalamaadan) திரைப்படத்தில் ஆழமான உணர்வுகளை சுமந்து, வலி, ஆசை மற்றும் ஏக்கத்தை அழகாக கலந்துவைக்கின்றன. நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்து பாடிய இந்தப் பாடல், தனது இயல்பான தீவிரத்தால் மனதை ஆழமாக தொட்டுச் செல்லும் சூழலை உருவாக்குகிறது. பாடல் வரிகளை எழுதிய மாரி செல்வராஜ், எரியும் காதல், உள்ளக் கலக்கம் மற்றும் உணர்வுகளின் நொந்த தன்மையை வெளிப்படுத்தும் வார்த்தைகளை அழகாக பின்னியுள்ளார்.

தீக்கொளுத்தி பாடல் வரிகள் ஒவ்வொரு வரியும், ஏக்கத்தால் எரியும் காதலரின் இதயத் துடிப்பை காட்டுகிறது—ஆசையில் மூழ்கியிருந்தும் துயரத்தில் சிதறியிருப்பதை வெளிப்படுத்துகிறது. “உன் வாசம் என் உறவுகளை உடைக்கிறது” அல்லது “என் மனசு தீ போல எரிகிறது” போன்ற கவித்துவமான சொற்கள் பாடலின் சக்திவாய்ந்த காட்சியைக் காட்டுகின்றன.

துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள காட்சிகள், பாடல் வரிகளின் ஆழத்தை இன்னும் வலுப்படுத்துகின்றன. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் பாடல், ஒரு சாதாரண சோகப் பாடல் அல்ல—இசை முடிந்த பிறகும் மனதில் நீண்ட நேரம் நிற்கும் ஆழமான மனித உணர்வுகளின் பிரதிபலிப்பு. இந்தப் படம் மாரி செல்வராஜின் இன்னொரு வெற்றிப் படமாக உருவாகியுள்ளது. This will is Major Turning Point Nivas K Prasanna Music Career

Scroll to Top
Tamil Song Lyrics with English Translation