Responsive Menu
Add more content here...
Responsive Menu
Add more content here...
Responsive Menu
Add more content here...
Responsive Menu
Add more content here...

ராஜ ராஜ சோழன் நான்…..

ராஜ ராஜ சோழன் நான்

ராஜ ராஜ சோழன் நான்

Raja Raja Chozhan naan lyrics in Irattai vaal kuruvi movie

ராஜ ராஜ சோழன் நான்
என்னை ஆளும் காதல் தேசம் நீதான்
பூவே… காதல்… தீவே….
மன்மீது சொர்க்கம் வந்து பெண்னாக ஆனதோ,,
உல்லாச பூமி இங்கு உண்டானததே,,,,,

 இரட்டை வால் குருவி திரைப்படத்தில் இடம் பெற்ற இந்தப்பாடல், எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் அதன் சுவை மாறாது சுகம் மாறாது
அத்தனை  நூற்றாண்டுகளின் பின்பும் நல்ல பாடல்களை ரசிக்கும் ரசிகர்கள் மனதில் ஓர் ஓரமாக இந்த பாடல் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும் என்றும் பசுமையாக.
அவ்வாறானதொரு பாடலை கொடுத்த இயக்குனர் பாலுமகேந்திரா இசையமைப்பாளர் இளையராஜா பாடகர் ஜேசுதாஸ் பாடலாசிரியர் முமேத்தா ஆகியோருக்கு ஒரு சபாஷ் போடலாம்…….

இயக்குனர் பாலுமகேந்திராவின் கற்பனைக்கு இளையராஜாவின் மனதை வருடும் மெட்டுக்கு கொஞ்சம் கூட விலகாமல் சிதையாமல் தனது கவித்துவமான அழகான வரிகளால் உருவம் கொடுத்திருக்கிறார் பாடலாசிரியர் முமேத்தா. இவர்களின் முயற்சிக்கு தன் கம்பீர குரலால் உயிர் கொடுத்து காற்றின் வழியே நம் காதுகளுக்கு எட்ட செய்திருக்கிறார் கே.ஜே. ஜேசுதாஸ்.

கண்ணோடு கண்கள் ஏந்தும் கற்பூர தீபமே
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம்…… என் காதல் வாகனம்…..
செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி,,,,,,,

ஒரு பாடலின் வெற்றி என்பது ரசிகர்களின் விருப்பத்திலேயே தங்கியிருக்கிறது என்பதால் இந்தப்பாடலை பொருத்தமட்டில் அன்று முதல் இன்று வரை தமிழ் திரையிசையை ரசிக்கும் ஒவ்வோர் மனதிலும் நீங்கா இடம்பிடித்திருக்கிறது பிடிக்கும் என்பது உன்மையே….

கல்லூர பார்க்கும் பார்வை உல்லார பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
முந்தானை மூடும் ரானி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே…. நீராடும் நேரமே…..
புல்லாங்குழல் தள்ளாடுமே பொன்மேனி கேளாய் ரானி,,,,,,

இந்தப்பாடலை கேட்கும் போதெல்லாம் காற்றின் வழியே வானவெளியில் பறப்பது போன்ற உணர்வு எனக்குள். என்னைக்கவர்ந்து சென்ற எத்தனையோ பாடல்களில்  இதுவும் ஒன்று இது கவர்ந்து மட்டுமல்ல கொஞ்சம் தாக்கிவிட்டும் சென்றது மனதை நீங்களும் கொஞ்சம் கேட்டுப்பாருங்கள் நிச்சயம் உங்களையும் கவரலாம்….

“வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே

பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே|”

Scroll to Top