கட்டா குஸ்தி 2 சம்பவக்காரி பாடல் வரிகள்

காதலும் கவர்ச்சியும் கலந்த சம்பவக்காரி பாடல் வரிகள், கட்டா குஸ்தி 2 (2026) தமிழ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இதில் Vishnu Vishal, Aishwarya Lekshmi மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் பாடலை Saindhavi Prakash மற்றும் Sean Roldan பாடியுள்ளனர். பாடலுக்கு இசையமைத்தவர் Sean Roldan. பாடல் வரிகளை Mohan Rajan எழுதியுள்ளார்

சம்பவக்காரி பாடல் வரிகள்
ஆண் : என்னடா பார்வை எங்கேயோ போகுது

பெண் : ஆமாம் அதுக்கென்னடி

ஆண் : பாத்தக்கா பஞ்சு பத்திக்கத்தான் போகுது

பெண் : ஆஆ... நான் பாத்துப்போம்டி

ஆண் : ஆக்கி வச்ச பேரழக
பாக்கி வச்ச பாவமடி
கெஞ்ச வைக்காத என் தேனு

நல்ல புள்ள நானும் இல்ல
தொட்டுப்புட்டா தூக்கம் இல்ல
கிட்ட வராத அது வீணு

பெண் : நீதான் கன்னி வெடி

ஆண் : போடா தண்ணி குடி

இருவர் :
சம்பவக்காரி
என் சம்பவக்காரி நீதான்டி
சம்பவம் செய்யும்
என் சந்தனக்கட்ட நீதான்டி

சம்பவக்காரி
என் சம்பவக்காரி நீதான்டி
சம்பவம் செய்யும்
என் சந்தனக்கட்ட நீதான்டி

ஆண் : தள்ளுமுள்ளு சண்டையில கெட்டிக்காரி நீ
ஒரு முத்தம் வச்சா அடங்குறியே என்ன ஆளு நீ

பெண் : ஓ... தள்ளுமுள்ளு சண்டையில கெட்டிக்காரி நீ
ஒரு முத்தம் வச்சா அடங்குறியே என்ன ஆளு நீ

ஆண் : ஒத்த முத்தம் வச்சிப்புட்டு ரொம்ப பேசுறா
நான் கொத்து கொத்தா திருப்பி தந்தா சுத்து போடுவா

பெண் : எடுத்த ஜென்மம் எல்லாம் என்ன அள்ளி தாரேன்

ஆண் : அடுத்த ஜென்மத்திலும் பொண்டாட்டியா வாரேன்

பெண் : நீதான் கெத்து புள்ள

ஆண் : நான் உன் கட்டுக்குள்ள

இருவர் :
சம்பவக்காரி
என் சம்பவக்காரி நீதான்டே
சம்பவம் செய்யும்
என் சந்தனக்கட்ட நீதான்

சம்பவக்காரி
என் சம்பவக்காரி நீதான்டே
சம்பவம் செய்யும்
என் சந்தனக்கட்ட நீதான்டே

ஆண் : என்னடா பார்வை எங்கேயோ போகுது

பெண் : ஆமாம் அதுக்கென்னடி

ஆண் : பத்தக்கா பஞ்சு பத்திக்கத்தான் போகுது

பெண் : ஆஆ... நான் பாத்துப்போம்டி

ஆண் : ஆக்கி வச்ச பேரழக
பாக்கி வச்ச பாவமடி
கெஞ்ச வைக்காத என் தேனு

நல்ல புள்ள நானும் இல்ல
தொட்டுப்புட்டா தூக்கம் இல்ல
கிட்ட வராத அது வீணு

ஆண் : நீதான் கன்னி வெடி

பெண் : போடா தண்ணி குடி

இருவர் :
சம்பவக்காரி
என் சம்பவக்காரி நீதான்டி
சம்பவம் செய்யும்
என் சந்தனக்கட்ட நீதான்டி

ஆண் :
சம்பவக்காரி சம்பவக்காரி
சம்பவக்காரி நான்தான்டா
சம்பவம் செய்யும் சம்பவம் செய்யும்
சந்தனக்கட்ட நான்தான்டா
Gatta Kusthi 2 - Sambavakaari Lyric | Vishnu Vishal, Aishwarya Lekshmi | Sean Roldan | Chella Ayyavu
Scroll to Top
Riaz Dreams